திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 22 மார்ச் 2023 (16:31 IST)

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 9 பேர் பலி: உரிமையாளர் கைது..!

காஞ்சிபுரத்தில் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒன்பது பேர் பலியான நிலையில் இந்த பட்டாசு ஆலையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை என்ற பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலைக்கு அந்த பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் இன்று காலை திடீரென இந்த பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதை அடுத்து இந்த விபத்தில் ஆலைய்ல் பணிபுரிந்த ஒன்பது பேர் பலியாகினார் மேலும் சிலர் காயம் அடைந்தனர்
 
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். முதல் கட்டமாக இந்த ஆலையின் உரிமையாளர் நரேந்திரன் என்பவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Siva