செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 1 மார்ச் 2020 (15:28 IST)

அன்பு சகோதரர் மு.க.ஸ்டாலினுக்கு.! – கமல்ஹாசன் ட்வீட்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் 67வது பிறந்தநாள் விழா இன்று திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. திமுக மூத்த உறுப்பினர் க.அன்பழகன் உடல்நல குறைவை கருத்தில் கொண்டு நிர்வாகிகள் யாரும் நேரில் வாழ்த்து தெரிவிக்க வர வேண்டாம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதனால் மாவட்ட நிர்வாகிகள் அந்தந்த மாவட்டங்களில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை கேக் வெட்டி, இனிப்புகள், அன்னதானம் வழங்கி கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில் “அன்பு சகோதரர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். தமிழகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராகவும், மக்களுக்காகவும் உங்கள் குரல் இன்னும் நிறைய நாட்கள் ஒலித்திட “என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.