செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 1 மார்ச் 2020 (12:22 IST)

மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்: 67 கிலோ கேக் வெட்டிய செந்தில்பாலாஜி!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளான இன்று கரூரில் பிரம்மாண்டமான கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் செந்தில் பாலாஜி.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் 67வது பிறந்தநாள் இன்று திமுகவினரால் பிரபலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் அந்தந்த மாவட்டங்களில் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவை கொண்டாடி வருகின்றனர்.

ஆனால் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல்நலகுறைவாக இருப்பதால் தன்னை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க யாரும் வர வேண்டாம் என மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் மு.க.ஸ்டாலினின் 67வது பிறந்தநாள் என்பதால் 67 கிலோ எடைக்கொண்ட பிரம்மாண்டமான கேக்கை வெட்டி கொண்டாடியுள்ளார் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி. மேலும் பல கரூரில் சில நிகழ்ச்சிகளுக்கு தயார் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.