புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 7 மார்ச் 2020 (08:48 IST)

திராவிட இயக்கத்தின் தெளிவுரை மறைந்தது! – கமல்ஹாசன் இரங்கல்!

திராவிட முன்னேற்ற கழகத்தின் மூத்த தலைவரான க.அன்பழகன் காலமானதற்கு கமல்ஹாசன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 24ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக பொது செயலாளரும், மூத்த தலைவருமான க.அன்பழகன் நேற்று இரவு காலமானார். க.அன்பழகனின் மறைவுக்கு பல்வேறு கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளதுடன், நேரில் சென்று அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன் “தமிழகத்தின் முதுபெரும் தலைவர், திராவிட சிந்தனையின் தெளிவுரை, ஏற்றுக்கொண்ட இயக்கத்தில் இறுதிவரை உறுதியோடு இருந்தவர், பேராசிரியர் திரு.அன்பழகன் அவர்களின் இழப்பு வேதனைக்குரியது. அவர் குடும்பத்தாருக்கும் அவரது இயக்கத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

மூத்த தலைவர் க.அன்பழகனுக்கு மரியாதை செய்யும் விதமாக திமுக கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடவும், ஒரு வார கால துக்கம் அனுஷ்டிக்கவும் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.