1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 22 ஆகஸ்ட் 2021 (14:24 IST)

பட்ஜெட் விவாதத்தை நேரடியாக ஒளிபரப்பவில்லை! – முதல்வருக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்!

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பட்ஜெட் விவாதங்களை நேரடி ஒளிபரப்பு செய்யக்கோரி கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் 13ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பட்ஜெட் மீதான விவாதம் கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து பதிவிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் “பட்ஜெட் மீதான முழு விவாதம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை. மானியக்கோரிக்கை  விவாதம் துவங்கப்போகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி, சட்டமன்ற நேரலை ஒளிபரப்பு நாளை முதலாவது தொடங்க தமிழக முதல்வர் ஆவன செய்யவேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.