வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 22 ஆகஸ்ட் 2021 (11:30 IST)

மணிப்பூர் ஆளுனரான தமிழக பாஜக மூத்த தலைவர்! – குடியரசு தலைவர் உத்தரவு!

மணிப்பூர் மாநில ஆளுனராக தமிழக பாஜக மூத்த தலைவர் இல.கணேசனை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவராகவும், எம்.பியாகவும் பதவி வகித்தவர் மூத்த தலைவர் இல.கணேசன். முன்னதாக பாஜக தலைவர்களாக இருந்த தமிழிசை சௌந்தர்ராஜன், எல்.முருகன் உள்ளிட்டவர்களுக்கு மாநில ஆளுனர், இணையமைச்சர் உள்ளிட்ட பதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில் தற்போது பாஜக மூத்த தலைவர் இல.கணேசனை மணிப்பூர் மாநில ஆளுனராக நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.