1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamilnadu PG course admission date

தமிழக கல்லூரிகளில் முதுகலை படிப்புக்கு அட்மிசன்! – கல்லூரி கல்வி இயக்ககம் அறிவிப்பு!

Tamilnadu
தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் முதுகலை அட்மிசன் தொடங்குவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட கட்டுபாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் பள்ளி, கல்லூரி அட்மிசன் பணிகள் தொடர்ந்து வருகின்றன, இந்நிலையில் தற்போது அரசு கல்லூரிகளில் முதுகலை படிப்பிற்கான மாணவர் சேர்க்கை குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்லூரி கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகம் முழுவதும் அரசு கல்லூரிகளில் முதுகலை படிப்பிற்கான சேர்க்கை நாளை முதல் செப்டம்பர் 1ம் தேதி வரை ஆன்லைன் மூலமாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
மாநிலங்களவைத் தேர்தல்: திமுக வேட்பாளர் இவர்தான்!