வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Updated : ஞாயிறு, 22 ஆகஸ்ட் 2021 (12:23 IST)

கமல்ஹாசன் – சூர்யா இணைந்து நடிக்கும் படம்? – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களான கமல்ஹாசன் மற்றும் சூர்யா இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக வெளியான தகவல் வைரலாகியுள்ளது.

சினிமாவில் பெரிய பெரிய நடிகர்கள் தனித்தனியாக படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போதைய ட்ரெண்டிங்கில் பெரிய நடிகர்கள் இணைந்து நடித்து வரும் படங்கள் ஹிட் அடித்து வருகின்றன. இந்நிலையில் கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்ட பிரபல நடிகர்களும் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் மலையாள ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான அமல் நீரத் அளித்த பேட்டி ஒன்றில் “கமல்ஹாசனையும், சூர்யாவையும் மனதில் வைத்து புதிய திரைக்கதையை எழுதி இருக்கிறேன். இருவரிடமும் இதனை தெரிவித்து விட்டேன். அவர்களும் சேர்ந்து நடிக்க சம்மதம் தெரிவித்து உள்ளனர். தற்போது திரைக்கதைக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணிகள் நடக்கின்றன” என்று தெரிவித்துள்ளார். இதை கமல் – சூர்யா ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.