1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Kamalhasan says he ready to get support from Rajinikanth

நான் கேள்வியும் கேட்பேன்.. ரஜினிகிட்ட ஆதரவும் கேட்பேன்! – கமல்ஹாசன் பேச்சு!

Tamilnadu
தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் மூலமாக முதல்வர் வேட்பாளராக போட்டியிடும் கமல்ஹாசன், ரஜினிகாந்தின் ஆதரவை கேட்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் தேர்தல் பிரச்சாரங்களை இப்போதே தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் மநீம தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது பேசியுள்ள அவர் ”நண்பர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதை விட அவரது உடல்நலனே முக்கியம். சென்னை சென்றதும் அவரை நேரில் சந்திப்பேன். சட்டமன்ற தேர்தலில் அவரது ஆதரவை கேட்பேன்” என கூறியுள்ளார்.

மேலும் “திராவிடம் என்ற சித்தாந்தம் திராவிட கட்சிகளுக்கு மட்டுமே உரியது அல்ல. ஹரப்பா, மொகஞ்சதாரோ காலம் தொட்டே திராவிடம் இருந்து வருகிறது” என கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
எங்க தலைமையில்தான் கூட்டணி; முதல்வர் வேட்பாளர் யார்? – பரபரப்பை கிளப்பும் பாஜக!