திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 30 டிசம்பர் 2020 (10:48 IST)

நாங்க என்ன இயேசுவை சுட்ட கோட்சே வாரிசா? – குழப்பிவிட்ட திண்டுக்கல் சீனிவாசன்!

அதிமுகவின் திட்டங்களை திமுக தொடர்ந்து விமர்சித்து வருவதற்கு கண்டனம் தெரிவித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த மாதம் ஜனவரியில் தமிழகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பணமாக ரூ.2500 வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இந்த திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டுமென திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து பேசியுள்ள அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் “பொங்கல் பணமாக ரூ.2500 வழங்க முதல்வர் அறிவித்துள்ளதற்கு திமுக எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஆனால் இதே திமுக முன்னர் ஆட்சியில் இருந்தபோது பொங்கலுக்கு பணம் வழங்கியது. நாங்கள் என்ன இயேசுவை சுட்ட கோட்சேவா?” என பேசியுள்ளார். காந்தி என்பதற்கு பதிலாக இயேசு என அமைச்சர் கூறியுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.