1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 30 டிசம்பர் 2020 (11:33 IST)

என் டார்கெட் ஸ்டாலின்தான்.. அவருக்கு எதிராதான் போட்டி! – சீமான் உறுதி!

தமிழக சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடுவது உறுதி என சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன. தேர்தல் மே மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இப்போதே அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் ஒவ்வொரு கட்சியின் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவார்கள் என்ற தீராத எதிர்பார்ப்பும், விவாதங்களும் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் தான் போட்டியிட போகும் தொகுதி குறித்து சூசகமாக பேசியுள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.

இதுகுறித்து பேசியுள்ள அவர் சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் எந்த தொகுதியில் போட்டியிடுகிறாரோ அந்த தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார். முந்தைய சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.