1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Kamal wished on aNNa birthday

அண்ணாவின் பிறந்தநாளுக்கு கமல்ஹாசன் வாழ்த்து!

அண்னா பிறந்தநாள்
திமுகவைத் தொடங்கியவரான பேரறிஞர் அண்ணாவின் 112 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

திமுக என்ற கட்சியை உருவாக்கி அது இன்று 70 ஆண்டுகள் தாண்டியும் தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளில் ஒன்றாக இருக்க காரணகர்த்தாவாக அமைந்தவர் அண்ணாதுரை. இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் மூலம் மாணவர்களை ஒன்றுதிரட்டி இந்தியை தமிழ்நாட்டில் இருந்து விரட்டி ஆட்சிக்கு வந்தது திமுக. வந்த ஓரே ஆண்டில் சுயமரியாதை திருமண சட்டம், தமிழகத்துக்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டியது எனப் பல அரிய திட்டங்களை செயல்படுத்திக் காட்டியவர்.இன்று அவரது 112 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் ‘பேரறிஞர் அண்ணா - திராவிடப் பெருங்கனவு கண்டு, தமிழர் நாட்டிற்கு "தமிழ்நாடு" எனப் பெயர் சூட்டியவர்.சமூக நீதிக் கொள்கைகளை அரசியல் சட்டமாக்கி, சமநீதி சமத்துவச் சீர்திருத்தம் தந்தவர்.  தமிழக அரசியலில் மறுமலர்ச்சி ஏற்படுத்தி, அரசியல் கற்கும் பல தம்பிகளுக்கு இன்றும் அண்ணனாய் நினைவில் வாழ்பவர்.’ எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
நல்ல வருமானம்; ஆனாலும் ஆன்லைன் சூதாட்ட மோகம்! – இளைஞர் எடுத்த விபரீத முடிவு!