1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 31 மே 2021 (11:19 IST)

அரசு உடனடியாக இதைக் கவனிக்கவேண்டும்: கமல்ஹாசன் வேண்டுகோள்!

நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்றாலும் தேர்தலுக்கு பின்னும் சுறுசுறுப்பாக அக்கட்சி இயங்கி வருகிறது என்பதும் குறிப்பாக கமல்ஹாசன் தனது டுவிட்டர் தளத்தில் அரசுக்கு அவ்வப்போது ஆலோசனைகளும் வேண்டுகோள்களூம் விடுத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் மருத்துவமனைகளில் கொரோனாவால் இறந்தவர்களின் சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்டதாகவும் சான்றிதழ் கிடைத்தால் மட்டுமே காப்பீடுகள் உள்ளிட்ட நிவாரணங்களை பெற முடியும் என்றும் அரசு இதனை உடனடியாக கவனிக்க வேண்டும் என்றும் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த டுவிட்டில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
 
மருத்துவமனைகள் இறந்தவர்களின் விவரங்களை உடனுக்குடன் இணையதளத்தில் பதிவு செய்யாததால் இறப்புச் சான்றிதழ் கிடைக்காமல் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். வங்கி முதலீடுகள், காப்பீடுகள் மற்றும் அரசின் நிவாரணங்களைப் பெற இச்சான்றிதழ் அவசியம். அரசு உடனடியாக இதைக் கவனிக்கவேண்டும்.