1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 27 மே 2021 (20:37 IST)

நான் டுவிட்டரில் இல்லை: மயில்சாமி அறிவிப்பு

டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலங்களின் போலியான அக்கௌன்ட்களை ஆரம்பிக்கும் வழக்கம் கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகிறது. குறிப்பாக திரையுலக பிரபலங்களின் பெயரில் ஆரம்பிக்கப்படும் போலி பக்கங்கள் காரணமாக பல்வேறு குழப்பங்கள் நிகழ்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
அந்த வகையில் கடந்த சில நாட்களாக காமெடி நடிகர் மயில்சாமி பெயரில் ஒரு சில போலி டுவிட்டர் பக்கங்களை அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தனது கவனத்துக்கு வந்த உடன் நடிகர் மயில்சாமி இது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் 
 
நான் டுவிட்டரில் இல்லை என்றும் என்னுடைய பெயரில் இருக்கும் டுவிட்டர் அக்கவுண்ட்டுகள் எதற்கும் நான் பொறுப்பல்ல என்றும் அந்தப் பக்கங்களை யாரும் ஃபாலோ செய்ய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மயில்சாமியின் இந்த அறிவிப்பு டுவிட்டரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது