வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : வெள்ளி, 28 மே 2021 (18:01 IST)

தயாநிதி அழகிரி பதிவு செய்த டுவிட்: வாழ்த்துக்கள் கூறும் திரையுலக பிரபலங்கள்!

அஜீத் நடித்த மங்காத்தா உள்பட ஒரு சில திரைப்படங்களை தயாரித்தவரும் முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரியின் மகனுமான தயாநிதி அழகிரி பதிவு செய்த டுவிட் ஒன்றுக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர் 
 
தயாநிதி அழகிரி மற்றும் அனுசுயா தம்பதிகளுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு மே 28ஆம் தேதி பெயர் வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சற்று முன் தயாநிதி அழகிரி தனது குழந்தைக்கு ’வேதாந்த்’ என்று பெயர் வைத்துள்ளதாக டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
 
மேலும் தனது மனைவி குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்து வரும் நிலையில் தயாநிதி அழகிரிக்கும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பதும் ஆர்யா உள்பட பலர் பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.