திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 28 மே 2021 (19:01 IST)

சோற்றுச் சண்டை தொடரத்தான் செய்கிறது: கமல்ஹாசனின் உலக பசிநாள் டுவிட்!

ஒவ்வொரு ஆண்டும் மே 28ஆம் தேதி உலக பசிநாள் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த பசி நாளில் கமல்ஹாசன் இதுகுறித்து டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த டுவிட்டில் அவர் கூறியிருப்பதாவது:
 
வறிய நாடுகள், வளரும் நாடுகளில் மட்டுமல்ல வல்லரசு நாடுகளிலும் கூட பசியைத் தீர்த்துக்கொள்வதற்கான சோற்றுச் சண்டை தொடரத்தான் செய்கிறது. இன்று உலக பசி நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. வெறும் விழிப்புணர்வு நோக்கில் மட்டும் பார்க்காமல் பசி போக்கும் உபாயங்களை யோசிக்கும் நாளாகவும் இது கடைப்பிடிக்கப்படவேண்டும்
 
இன்று உலக பசி நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட ஆய்வில் உலகில் 18 நாடுகளில் உணவு பற்றாக்குறை காரணமாக மக்கள் பசியால் வாடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் பசியால் வாடுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் பசியால் வாடுபவர்களின் பட்டியலில் உள்ள 117 நாடுகளில் இந்தியா 102வது இடத்தில் உள்ளதாகவும் கடந்த 2019ஆம் ஆண்டு எடுத்த அறிக்கையில் குறிப்பிட குறிப்பிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது