1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 7 ஜூலை 2020 (07:21 IST)

நாசர் மனைவிக்கு முக்கிய பதிவி: 2021 தேர்தலுக்கு தயாராகிறது மக்கள் நீதி மய்யம்

நாசர் மனைவிக்கு முக்கிய பதிவி:
2021 ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து அதிமுக, திமுக உள்பட அனைத்துக் கட்சிகளும் தற்போது தேர்தலுக்கு தயாராகி வருகிறது என்பது தெரிந்ததே 
 
அந்தவகையில் கடந்த 2017 ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்த கமலஹாசனும் தேர்தல் களத்தில் குதிக்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது கட்சி நிர்வாகிகளை மாற்றியுள்ளார். இதில் தனது நெருங்கிய நண்பரான நாசரின் மனைவி கமீலா நாசருக்கு கட்சியில் முக்கிய பதவி ஒன்றை கொடுத்துள்ளார்
 
இதுகுறித்து கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில் கமீலா நாசருக்கு சென்னை மண்டலத்தில் மாநில செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் கமீலா நாசர் மக்கள் நீதி மய்யம் கட்ச்யின் வேட்பாளராக போட்டியிட்டு டெபாசிட் வாங்கிய மிகச்சிலரில் ஒருவர் தான் கமீலா நாசர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் விவசாய அணி மாநில செயலாளராக மயில்சாமி என்பவரையும், கோவை மண்டல மாநில செயலாளராக ரங்கநாதன் என்பவரையும், திருநெல்வேலி மண்டல மாநில செயலாளராக டாக்டர் பிரேம்நாத் என்பவரையும், விழுப்புரம் மாவட்ட மாநில செயலாளராக ஸ்ரீபதி என்பவரையும், தலைமை நிலைய பரப்புரையாளராக காந்தி கண்ணதாசன் என்பவரையும் கமலஹாசன் நியமனம் செய்துள்ளார்