1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 14 டிசம்பர் 2020 (13:30 IST)

ரஜினியை வைத்து பாஜக சினிமா வேண்டுமானால் செய்வார்கள்.. கமல்ஹாசன்

ரஜினியை வைத்து பாஜக அரசியல் செய்ய மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன் வேண்டுமானால் ரஜினியை வைத்து பாஜக சினிமா செய்வார்கள் என்று கமலஹாசன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் தனது அரசியல் வருகையை உறுதி செய்த நிலையில் ரஜினியின் பின்னால் பாஜக இருப்பதாகவும் பாஜகவில் உள்ள பெரும் தலைவர்கள் தான் ரஜினியின் பின்னால் இருந்து அவரை ஆட்டி வைப்பதாகவும் கூறுகின்றனர்
 
மேலும் ரஜினி கட்சி ஆரம்பித்தால் அது பாஜகவின் கொள்கையை ஒட்டியே இருக்கும் என்றும் ரஜினிக்கு ஓட்டு போடுவது பாஜகவுக்கு ஓட்டு போடுவதும் ஒன்றுதான் என எதிர்கட்சி தலைவர் குற்றம்சாட்டி வருகின்றனர் 
 
இந்த நிலையில் ரஜினியின் பின்னால் பாஜக இருக்கிறதா என்று கமல்ஹாசனிடம் இன்று செய்தியாளர்கள் கேட்டபோது அவர், ‘ரஜினியை வைத்து பாஜக அரசியல் செய்ய மாட்டார்கள் என நினைக்கின்றேன். ரஜினியை வைத்து சினிமா வேண்டும் ஆனால் அவர்கள் செய்வார்கள் என்று கூறியுள்ளார் 
 
மேலும் ரஜினியுடன் இணைவது குறித்து விரைவில் அறிவிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கமல்ஹாசனின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது