1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 14 டிசம்பர் 2020 (10:06 IST)

மக்களோடு தொடர்பே இல்லாதவரின் பிதற்றலே இது: கமலுக்கு எச்.ராஜா கண்டனம்!

புதிய பாராளுமன்ற கட்டிட தொடக்கவிழாவை சமீபத்தில் பிரதமர் மோடி நடத்திய நிலையில் புதிய பாராளுமன்ற கட்டிடம் குறித்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கமல்ஹாசன் தனது டுவிட்டரில், ‘சீனப்பெருஞ்சுவர் கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து போனார்கள். மக்களைக் காக்கத்தான் இந்தச் சுவர் என்றார்கள் மன்னர்கள். கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில்,ஆயிரம் கோடியில் பாராளுமன்றம் கட்டுவது யாரைக்காக்க?  பதில் சொல்லுங்கள் என் மாண்புமிகு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரே.... என்று விமர்சனம் செய்திருந்தார்.
 
கமல்ஹாசனின் இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ள எச்.ராஜா தனது டுவிட்டரில் கூறியதாவது: பொய் பரப்புவது என்று முடிவு செய்துவிட்டால் அதற்கு எந்த எல்லையும் தேவையில்லை. கடந்த 9 மாதங்களாக 80 கோடி பேருக்கு ஒவ்வொரு மாதமும் 5 கிலோ அரிசி/கோதுமை,1கிலோ பருப்பு இலவசமாக மத்திய அரசு அளிக்கிறது. யார் பட்டினி இருக்கிறார்கள். மக்களோடு தொடர்பே இல்லாதவரின்பிதற்றலே இது என்று கூறியுள்ளார்.
 
கமல் மற்றும் எச்.ராஜாவின் இந்த டுவிட்டுக்களுக்கு நெட்டிசன்களும் தங்களது பாணியில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.