1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Pragya Thakur speech about caste goes controversial

சூத்திரர்னு சொன்னா ஏன் கோவப்படுறீங்க? – மீண்டும் சர்ச்சையில் ப்ரக்யா தாகூர்!

National
அடிக்கடி சர்ச்சையான கருத்துகளை பேசி சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வரும் பாஜக எம்.பி ப்ரக்யா தாகூர் தற்போது சாதி குறித்து பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பாஜகவை சேர்ந்த ப்ரக்யா தாகூர் போபாலில் மக்களவை உறுப்பினராக உள்ளார். அடிக்கடி இவர் பொது தளத்தில் கூறும் கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. முன்னதாக காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவை சுதந்திர போராட்ட தியாகி என ப்ரக்யா பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பாஜக தலைமை கண்டித்ததால் வருத்தம் தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது சாதி அமைப்பு குறித்து இவர் பேசியுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ப்ரக்யா “பிராமணர்களோ, சத்திரியர்களோ அல்லது வைசியர்களோ அவர்களை அவ்வாறு அழைப்பதை தவறாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் சூத்திரர்கள் மட்டும் அவ்வாறு அழைப்பதற்காக கோபப்படுவது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளார். அவரது இந்த பேச்சு மீண்டும் சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
தோல்வியை ஒப்புக்கொள்ளாத ட்ரம்ப்! ஜோ பிடன் ஆட்களுடன் மோதல்! – கலவரமான அமெரிக்கா!