1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 3 ஜனவரி 2020 (22:23 IST)

விஜய் டிவியிடம் இருந்து சன் டிவிக்கு மாறிய கமல்ஹாசன்!

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த நாள் முதல் விஜய் டிவியின் பிராண்ட் அம்பாசிடராக கமலஹாசன் மாறிவிட்டார் என்றே கூறலாம். விஜய் டிவிக்கு பெருமளவு ஆதரவு கொடுத்து வரும் கமல்ஹாசன் திடீரென சன் டிவிக்கு மாறியுள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
 
பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு குறித்த ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு வீரர்கள் பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசனும் கலந்து கொண்டார். ஜல்லிக்கட்டு வீரர்களுடன் அவர் கலந்துரையாடியது, ஜல்லிக்கட்டின் பாரம்பரியம் குறித்து அவர் பேசியது ஆகியவை சுவராசியமாக ஒரு மணி நேர நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது
 
இந்த நிகழ்ச்சி கமல்ஹாசனின் ஆதரவு டிவியான விஜய் டிவியில் தான் வரும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் திடீரென சன் டிவிக்கு சென்றிருப்பதாக கூறப்படுகிறது. கமல் நிகழ்ச்சி ஒன்று சன் டிவிக்கு செல்லவிருப்பது சின்னத் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விரைவில் இந்த நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு சன் டிவியில் வெளிவரும் என்று கூறப்படுகிறது