1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வியாழன், 2 ஜனவரி 2020 (11:54 IST)

பொங்கல் ரேஸில் இருந்து பேக் வாங்கிய "சுமோ"

சுமோக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி காமெடி கலந்த செண்டிமெண்ட் படமாக உருவாகியிருக்கும் " சுமோ " என்ற படத்தில் மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்துள்ளார். "வணக்கம் சென்னை" படத்திற்கு பிறகு பிரியா ஆனந்த் இரண்டாவது முறையாக இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரமொன்றில் ஜப்பானைச் சேர்ந்த முன்னாள் சுமோ மல்யுத்த வீரர் யோசினோரி தாஷிரோ நடித்துள்ளார்.
 
இப்படத்திற்கு நடிகர் சிவாவே திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. நிவாஸ் கே பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து இப்படத்தின் கலகலப்பான ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. 
 
இந்த படம் பொங்கல் தினத்தின் ஸ்பெஷலாக ரஜினியின் தர்பார் படத்துடன் மோதவிருப்பது. ஆனால் தற்போது இந்த படம் பொங்கலன்று வெளிவராது என முணு முணுக்கப்படுகிறது. இருந்தாலும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியானால் மட்டுமே உறுதி செய்யப்படும். எனவே வருகிற பொங்கல் தினத்தில் தனுஷின் பட்டாஸ் ரஜினியின் தர்பார் படங்கள் வெளிவரவிருப்பது குறிப்பிடத்தக்கது.