செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 3 ஜனவரி 2020 (15:57 IST)

கல்லா கட்டும் தர்பார் டீம் – ஒரு டிக்கெட் இவ்வளவா ?

ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பொங்கலை முன்னிட்டு வெளியாகும் இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ள நிலையில் அந்த எதிர்பார்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக தயாரிப்பாளர்கள் டிக்கெட் விலையை உயர்த்தி விற்க முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து சிறப்புக் காட்சிகளுக்கான டிக்கெட் விலையை 15 மடங்கு உயர்த்தி விற்க தியேட்டர்காரர்களுக்கு அழுத்தம் தரப்படுவதாக சொல்லப்படுகிறது. பண்டிகை நாட்களில் வெளியாகும் பெரிய நடிகர்களின் படங்களின் டிக்கெட் விலை அதிகமாக விற்பது வாடிக்கையாகியுள்ளது.

படங்களில் சமூக கருத்து மற்றும் ஊழலுக்கு எதிராக பேசும் நடிகர் மற்றும் இயக்குனர்கள் இதுபோன்று ரசிகர்களை சுரண்டுவது முரணாகவே உள்ளது.