1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 22 பிப்ரவரி 2018 (19:05 IST)

அதிமுகவை பார்த்து பாடம் கற்றுக்கொண்டு உஷாரான கமல்!

அதிமுகவை பார்த்து பாடம் கற்றுக்கொண்டு உஷாரான கமல்!
அரசியல் கட்சிகள் பொதுவாக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் என அனைத்து பதவிகளை கொண்டதாக இருக்கும். ஆனால், கமலின் கட்சியில் இவை எதுவுமே இல்லை.
 
மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சியை கமல் நேற்று அறிமுகம் செய்தார். அதன் பின்னர் தான் தலைவன் இல்லை என்றும், மக்களின் கருவி என்றும் கூறினார். அதற்கு ஏற்றார் போல் அவரது கட்சியில் கூறும்படியான பதவிகள் ஏதும் இல்லை.
 
உயர்மட்ட குழு மற்றும் மாநில நிர்வாகிகளை மட்டுமே நியமித்தார். இந்நிலையில், ஒரு பதவி கூட இல்லாமல் ஒரு கட்சி நடத்த முடியுமா என விவாதம் துவங்கியுள்ளது. ஆனால், ஒரு கட்சியில் இது போன்ற பதவிகள் அவசியம் இல்லை என கூறப்படுகிறது. 
 
ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பொதுச்செயலாளர் பதவி யாருக்கு என ஆளும் கட்சியில் பஞ்சாயத்து ஏற்பட்டது. இதனால் பல பிரச்சனைகள் நிலவியது. இவை அனைத்தும் தெரிந்ததே.
 
ஆனால், தற்போது விஷயம் என்னவெனில் பதவிகள் ஏதும் இல்லாமல் கட்சி துவங்கப்படுவதே வியப்பாக உள்ளது.