1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 22 பிப்ரவரி 2018 (17:36 IST)

எங்க அப்பா அப்பவே சொன்னார் - கமல் குறித்து காயத்ரி ரகுராம் டிவிட்

நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவார் என என் தந்தை முன்பே கூறினார் என நடிகை காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.

 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கமல்ஹாசன் மற்றும் ரசிகர்களிடம் ஏகத்துக்கும் திட்டு வாங்கியவர் காயத்ரி ரகுராம். இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் அவ்வப்போது சில பதிவுகளை இட்டு வருகிறார்.
 
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்திருப்பது பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர் “என்னுடைய தந்தை எப்போதும் கமல்ஹாசன் பற்றி பெருமையாக பேசுவார். அதேபோல், கமல் சார் பிற்காலத்தில் அரசியல்வாதியாக வருவார் எனவும், அவர் ஒரு சிறந்த தலைவராக விளங்குவார்  எனவும் என் சிறுவயது முதலே என் தந்தை கூறுவார். தற்போது அவருக்கு பொறுப்பு அதிகரித்துள்ளது. அவருக்காக பிரார்த்திப்போம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இதைக்கண்ட ஒருவர் “பிரார்த்தனை செய்வதற்கு பதில் அவருக்கு ஆதரவு தெரிவித்து அவருடைய கட்சியில் இணைய வேண்டும். நீங்கள் கூறியது உண்மையெனில், நீங்களும் இணையுங்கள்” என ஒருவர் டிவிட் செய்தார். 
 
அதற்கு பதிலளித்த காயத்திரி “ஒருவரை கண்முடித்தனமாக பின்பற்றித்தான் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்பது இல்லை. அவர் வித்தியாசமாக செயல்பட வேண்டும். மற்ற அரசியல் கட்சிகளை விட பலமாக இருக்க வேண்டும். அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டும். அது அவ்வளவு எளிதல்ல. அது எனக்கு தெரியும்” என பதிலளித்துள்ளார்.
 
கமல்ஹாசனின் பல திரைப்படங்களில் நடன இயக்குனராக பணியாற்றிய ரகுராமின் மகள்தான் காயத்ரி என்பது குறிப்பிடத்தக்கது.