திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 22 பிப்ரவரி 2018 (16:57 IST)

மக்கள் நீதி மய்யம்' கட்சியின் அடுத்த பொதுக்கூட்டம் எங்கே?

கமல்ஹாசனின் 'மக்கள் நீதி மய்யம்' என்ற கட்சி நேற்று மதுரையில் பிரமாண்டமாக தொடங்கப்பட்டு அதன் கொடி, கொள்கைகளும் அறிமுகம் செய்யப்பட்டன.

இந்த கூட்டத்திற்கு சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் மதுரையில் நடத்திய பிரமாண்டமான பொதுக்கூட்டம் போன்று அடுத்த பொதுக்கூட்ட அறிவிப்பையும் கமல் இன்று தெரிவித்துள்ளார்.

இதன்படி மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடுத்த பிரமாண்டமான பொதுக்கூட்டம் வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி நடைபெறும் என்றும் அதற்கு முன்னர் திட்டமிட்டபடி அனைத்து இடங்களுக்கும் தான் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கமல் தெரிவித்தார்.

மதுரையை அடுத்து திருச்சியிலும் ரசிகர்கள் லட்சக்கணக்கில் குவிந்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.