வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: வியாழன், 22 பிப்ரவரி 2018 (16:49 IST)

குவாட்டர், ஸ்கூட்டர் கிடையாது.. மேட்டர்? - கமலை கொச்சையாக விமர்சித்த பாஜக பிரமுகர்

பாஜக பிரமுகரும் தொலைக்காட்சி விவாதங்களில் அந்த கட்சி சார்பாக பேசும் பேச்சாளர் நாராயணன் திருப்பதி அரசியல் கட்சி தொடங்கியுள்ள கமல்ஹாசனை கொச்சையாக விமர்சித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 
நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை நேற்று ராமேஸ்வரத்தில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்திலிருந்து துவங்கினார். அதன்பின் மாலை மதுரை பொதுக்கூட்டத்தில் தனது கட்சி பெயரையும் கொடியையும் அறிமுகம் செய்தார்.   
 
மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சி பெயரையும், சிவப்பு, வெள்ளை, கருப்பு ஆகிய நிறங்களுடன் ஒன்றிணைந்த கைகளோடு நடுவில் நட்சரத்திரத்துடன் உள்ள தனது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார். மேலும், அவர் மேடையில் பேசும் போது, மக்களுக்கு ஸ்கூட்டர், குவாட்டர் கொடுக்க மாட்டோம். மற்றவர்களுக்கு ஸ்கூட்டர் வாங்கி தரும்படியாக அவர்களின் பொருளாதார நிலையை மாற்றுவோம் என வாக்குறுதி அளித்தார்.
 
இந்நிலையில், பாஜக நபரும்,  தொலைக்காட்சி விவாதங்களில் பாஜக சார்பாக பங்கேற்கும் நாராயணன் திருப்பதி தனது டிவிட்டர் பக்கத்தில்,“குவாட்டர், ஸ்கூட்டர் கிடையாது! மேட்டர்?” என கொச்சையாக கேள்வி எழுப்பியுள்ளார். இதையடுத்து, நெட்டிசன்கள் அவரை ஏகத்துக்கும் விமர்சித்து வச்சு செய்து வருகின்றனர்.