வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 8 ஏப்ரல் 2018 (12:37 IST)

எனக்கு எதிரிகள் அதிகம்; கமலை எதிர்க்கப்போவது இல்லை - ரஜினி

கமல் எனக்கு எதிரி இல்லை என்றும் தான் கமலை எதிர்க்கப்போவது இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த கூறியுள்ளார்.

 
போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை குறித்து பேசினார். ரஜினிகாந்த் ஆன்மீக அரசியலை முன்னெடுத்தால் அதை எதிர்ப்பேன் என்று கமல் கூறியது குறிப்பிடட்தக்கது. இதுகுறித்து ரஜினியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:-
 
கமல் எனக்கு எதிரி இல்லை. அவரை நான் எதிர்க்கப்போவதும் இல்லை. ஏழ்மை, வேலையில்லா திண்டாட்டம், லஞ்சம், ஏழைகளின் கண்ணீர், விவசாயிகள் பிரச்சனை, மீனவர்கள் பிரச்சனை, ஈழத்தமிழர் பிரச்சனை ஆகியவைதான் என்னுடைய எதிர்கள். 
 
நிறைய பேசுவதால் எதிரிகள்தான் அதிகமாவார்கள். இதுவரை தமிழகத்தில் பேசி பேசியே அரசியல் செய்துவிட்டார்கள். இனி அது மாற வேண்டும் என்று கூறியுள்ளார்.