வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : சனி, 7 ஏப்ரல் 2018 (18:42 IST)

என்னுடைய கேரக்டர் தான் காலா படத்தை நகர்த்திச் செல்லும் – அஞ்சலி பட்டேல்

என்னுடைய கேரக்டர் தான் காலா படத்தை நகர்த்திச் செல்லும் என அஞ்சலி பட்டேல் தெரிவித்துள்ளார்.

 
பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காலா’. ரஜினிகாந்த் நடித்துள்ள இந்தப் படத்துக்கு, சென்சார் அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். சமுத்திரக்கனி, நானா படேகர், அஞ்சலி பட்டேல், ஈஸ்வரி ராவ், ஹூமா குரேஷி, சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
 
“ரஜினி சாரின் படங்களில் இருந்து இந்தப் படம் ரொம்பவே வித்தியாசமானது. இந்தப் படத்தில் அழுத்தமான அரசியல் செய்திகள் இருக்கின்றன. என்னுடைய கேரக்டர் தான் இந்தப் படத்தை நகர்த்திச் செல்லும். எனவே, என்னுடைய கேரக்டர் பற்றி விவரித்துச் சொல்ல முடியாது” எனத் தெரிவித்துள்ளார் அஞ்சலி பட்டேல்.