வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: சனி, 7 ஏப்ரல் 2018 (16:54 IST)

சினிமாவில் உலக நாயகன்: அரசியலில் நகைச்சுவை நாயகன்; கமல் குறித்து செல்லூர் ராஜூ

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் உலக நாயகனுமான கமல்ஹாசனை அவ்வப்போது சீண்டிவிடுவதே தமிழக அமைச்சர்களின் வேலையாக உள்ளது. குறிப்பாக அமைச்சர் ஜெயகுமார் தினமும் கமல் குறித்த விமர்சனத்தை கூறி வருகிறார்.

இதற்கு கமல்ஹாசனும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பொதுமேடையிலும் டுவிட்டரிலும் பதிலடி கொடுத்து வருகிறார். இந்த நிலையில் அமைச்சர் ஜெயகுமார் மட்டுமின்றி ராஜேந்திர பாலாஜி, மாஃபா பாண்டியராஜன் உள்பட இன்னும் ஒருசில அமைச்சர்களும் கமல்ஹாசனை விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த பட்டியலில் தற்போது தெர்மோகோல் புகழ் அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்களும் இணைந்து கொண்டார். அவர் இன்று கமல் குறித்து கூறியபோது சினிமாவில் உலகநாயகனாக நடித்து கொண்டிருந்த கமல்ஹாசன், அரசியலில் நகைச்சுவை நடிகராகிவிட்டார் என்று கூறியுள்ளார். அமைச்சரின் இந்த கருத்துக்கு கமல்ஹாசன் ரசிகர்கள் தக்க பதிலடியை டுவிட்டரில் கொடுத்து வருகின்றனர். விரைவில் கமல்ஹாசனும் பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.