வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : சனி, 7 ஏப்ரல் 2018 (16:56 IST)

உலக நாயகானாக இருந்தவர் காமெடியனாகிவிட்டார்: செல்லூர் ராஜூ

அரசியல் களத்தில் நடிகர் கமல்ஹாசன் நகைச்சுவை நடிகராவிட்டார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

 
நடிகர் கமல் ஹாசன் அரசியலில் களமிறங்கும் முன்பே ஆளும் கட்சியை கடுமையாக விமர்சித்து வந்தார். இவர் தொடர்ந்து அதிமுகவினரை விமர்சித்து வருகிறார். இரண்டு நாட்களுக்கு அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், கமல் ஒரு ஓய்வுபெற்ற ஹீரோ; நாங்கள் அரசியலில் ஹீரோ என்று கூறியிருந்தார்.
 
இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ கமல்ஹாசனை தாக்கி பேசியுள்ளார். சினிமாவில் உலக நாயகனாக இருந்த கமல்ஹாசன் அரசியல் களத்தில் நகைச்சுவை நடிகராவிட்டார். தமிழக முதல்வாரகி விடலாம் என்ற கனவு பலிக்காது என்று கூறியுள்ளார்.