ஆள் கடத்தலை தடுக்க வேண்டும்: பிரதமருக்கு கமல் கடிதம்
கடந்த பிப்ரவரி மாதம் அரசியல் கட்சியை ஆரம்பித்த நடிகர் கமல்ஹாசன், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திப்பதோடு, அவ்வப்போது தேசிய தலைவர்களையும் சந்தித்து வருகிறார்
அந்த வகையில் மத்திய பாஜக அரசை அடிக்கடி விமர்சனம் செய்து வருவதோடு தமிழக பாஜக தலைவர்களான எச்.ராஜா, தமிழிசை செளந்திரராஜன் ஆகியோர்களுடன் அவ்வப்போது கருத்து மோதலில் ஈடுபட்டு வரும் கமல்ஹாசன் இன்று பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஆள் கடத்தல் தடுப்பு மசோதாவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நாட்டில் குழந்தைகள், பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் கமல் அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.