திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 7 டிசம்பர் 2018 (07:55 IST)

கஜா புயல் சேதங்களை பிரதமர் ஏன் பார்வையிடவில்லை: பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம்

கடந்த மாதம் கஜா புயல் டெல்டா பகுதியில் பெரும் சேதங்களை ஏற்படுத்தி அப்பகுதி மக்களின் வாழ்வாதாரங்களை சிதறடித்தது. இந்த நிலையில் மாநில அரசு, தன்னார்வலர்கள், திரையுலகினர் என பலர் டெல்டா பகுதி மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரண்டு முறை நேரில் சென்று கஜா புயல் சேதங்களை பார்வையிட்டார்.

இந்த நிலையில் நடிகை பிரியங்கா சோப்ராவின் திருமணத்திற்கு செல்ல நேரமிருந்த பிரதமர் மோடி அவர்களுக்கு கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு சென்று அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் கூற நேரமில்லையா? என்ற கேள்வியை எதிர்க்கட்சியினர் எழுப்பினர்.

இதுகுறித்த கேள்விக்கு ஒன்றுக்கு பதில் கூறிய மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், 'பிரதமரின் சார்ப்பில் தான் நானும், அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களும் பார்வையிட்டோம் என்று கூறியுள்ளார். அமைச்சரின் இந்த பதில் அனைவருக்கும் அதிருப்தி அளித்ததாகவே தெரிகிறது.