ரஜினி,கமலுக்கு அழைப்பு விடுத்த ஸ்டாலின் : காரணம் என்ன ...?

STALIN
Last Updated: வியாழன், 6 டிசம்பர் 2018 (16:31 IST)


மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்க திரையுலகில் ஜொலித்து அரசியல் உலகில் கால் எடுத்து வைத்துள்ள ரஜினி, கமல் ஆகிய இருவருக்கும் திமுக சார்பில் திமுக பிரமுகர்கள் நேரில் சென்று இன்று அழைப்பிதழ் வழங்கியுள்ளனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை வருகிற 16 ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் திறக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பல்வேறு கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.satlin <a class=rajini kamal" class="imgCont" height="417" src="//media.webdunia.com/_media/ta/img/article/2018-12/06/full/1544093199-5245.jpg" style="text-align: center; border: 1px solid rgb(221, 221, 221); margin-right: 0px; float: none; z-index: 0;" title="" width="740" />
இந்நிலையில் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவிற்கு ரஜினி, கமலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது அரசியல் விமர்சகர்களால் முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :