புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Updated : ஞாயிறு, 22 செப்டம்பர் 2019 (09:20 IST)

வாயை வச்சுகிட்டு சும்மா இருக்க மாட்டேங்குறேன்: தன்னைத்தானே நொந்து கொண்ட கமல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சொல்ல சொன்னதை மட்டும் சொல்லிவிட்டு வராமல் தேவையில்லாமல் தான் பேசி வருவதாக தன்னை தானே நொந்து கொல்வது போல் கமல் செய்த காமெடி இன்றைய நிகழ்ச்சியை பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது
 
இன்றைய நிகழ்ச்சியில் யாரை காப்பாற்றுவது, யாரை வெளியேற்றுவது என்று அறிவிக்கவிருப்பதாக கமல் நேற்றே கூறினார். அதற்கு முன் யாரை காப்பாற்றலாம் என்று போட்டியாளர்களின் கருத்தை கமல் கேட்க, அதற்கு லாஸ்லியா, சேரன் மற்றும் கவின் ஆகிய இருவரையும்  கூறுகிறார்.
 
அப்போது கமல் கிண்டலுடன் ‘நான் பாட்டுக்கு யாரை காப்பாற்றுவது என்று சொல்ல சொன்னதை சொல்லியிருக்கலாம், தேவையில்லாமல் வாயை வச்சுகிட்டு சும்மா இருக்காமல் இவங்களிடம் அரட்டை அடிச்சேன். புரோக்ராம் டைமை மெயிண்டன் செய்ய யாரை காப்பாற்றுவது என்று சொல்லிவிட்டு நான் கிளம்பியிருக்கலாம்’ என்று லாஸ்லியாவை கலாயத்தது மட்டுமின்றி ஆடியன்ஸ்களையும் பார்த்து கமல் கண்ணடித்தார்.