திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By சினோஜ்கியான்
Last Updated : சனி, 21 செப்டம்பர் 2019 (14:18 IST)

இடைத்தேர்தல் தொகுதி : கேட்டு வாங்கிய காங்கிரஸ் ஹேப்பி.. .விட்டுக் கொடுத்த திமுக சேப்டி... !

நாங்குநேரி - விக்கிரவாண்டி மற்றும் புதுவை மாநிலத்தில் உள்ள காமராஜ் நகர் ஆகிய தொகுதிகளுக்கான இடத்தேர்தல் வரும் அக்டோபர் 21ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான மனுதாக்கல் செப்டம்பர் 23 தொடங்கி 30ம் தேதி வரை நடைபெறும். மனு மீதான பரிசீலனைகள் அக்டோபர் 1 ம் தேதியும், மனுவை திரும்ப பெறுவதற்கு அக்டோபர் 3ம் தேதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் திமுக தலைவர்கள் , அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினர். இதில் திமுக - விக்கிரவாண்டி மற்றும் புதுவையிலுள்ள காமராஜ் நகர் தொகுதியிலும், காங்கிரஸ் - நாங்குநேரி தொகுதியிலும் போட்டியிட முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 21ல் நடக்கும் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பணிகள் அக்டோபர் 24ல் நடைபெறும் என தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சிகள் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தயாராக உள்ளனர்.
 
இந்த நிலையில், வரும் அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி, நடைபெற இருந்த திமுகவில் பொதுக்குழுவின் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக  அக்கட்சியின் பொதுச்செயலாளர் க. அன்பழகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
அதில்,நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கபட்டதை அடுத்து பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது என்றும், திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்பட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகித்துவருகிறது காங்கிரஸ் கட்சி . இன்று,இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவித்த ஒருசில மணிநேரத்திலேயே திமுக தலைவர்கள் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி உட்பட அக்கட்சியைத் சேர்ந்த பலரும் திமுகவில் தலைமை அலுவலகமாக அண்ணா அறிவாலயத்துக்கு வருகை தந்துள்ளனர்.
 
தற்போது, இருதரப்புக்கும் இடையே பேச்சு வார்த்தை தொடங்கியுள்ளது. ஏற்கவே காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. வசந்தகுமார் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, கன்னியாகுமரியில் எம்பியானதை அடுத்து, தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
 
இதனையடுத்து, காங்கிரஸ் தலைவர்கள் ராங்குநேரியில் போட்டுவதில் பெரிதும் ஆர்வம் காட்டிவருகின்றனர். இதுகுறித்து அவர்கள் முன்னர் தெரிவித்த பேச்சுக்களிலேயே தெரிந்தது. அதேபோல் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
 
இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதாவது :
 
திமுக - விக்கிரவாண்டி மற்றும் புதுவையிலுலள்ள காமராஜ் நகர் தொகுதியிலும், காங்கிரஸ்- நாங்குநேரி தொகுதியிலும் போட்டியிட முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும் நாளை மறுநாள் திமுக சார்பில் மனு பெறப்படும் என தெரிவித்தார்.

எனவே, நாங்குநேரி தொகுதியில் ஏற்கனவே பலமுறை காங்கிரஸ் கட்சியினர் வெற்றி பெற்றிருப்பதால் இம்முறையும் காங்கிரஸ் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளனர். அதனால் அக்கட்சியினர் மகிழ்ச்சியில் உள்ளனர். அதேபோல்,  வரும் இடைத்தேர்தலில் கூட்டணிக் கட்சி காங்கிரஸ் ஜெயித்துவிடுமென்ற நம்பிக்கை உள்ளதால் , அடுத்து விக்கிரவாண்டி மற்றும் காமராஜ் ஆகிய தொகுதியில் காங்கிரஸ் கட்சியினர் துணையுடன் திமுக ஜெயிக்க சேப்டியாக அரசியல் பிளேன் போட்டுள்ளார் முக ஸ்டாலின் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.