கமல்ஹாசனின் ம.நீ.ம கட்சிக்கு ’’சின்னம் ’’ஒதுக்கீடு

kamal
Last Updated: ஞாயிறு, 10 மார்ச் 2019 (12:06 IST)
வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தடபுடலாக பிரசாரம் செய்து வருகின்றன. இதில் கடந்த வருடம் கட்சி தொடங்கி சரியாக ஒரு வருடம் கடந்திருக்கும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வேகமாக வளர்ந்து வருகிறது. இக்கட்சியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு  ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கு தேர்தல் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் கமல்ஹாசனின்  மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இன்று தேர்தல் ஆணையம் ’பேட்டரி டார்ச் ’சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது.
 

 
 


இதில் மேலும் படிக்கவும் :