மம்தாபானர்ஜி எதிர்ப்பு எதிரொலி: மொபைல்-ஆதார் இணைப்பு கைவிடப்படுகிறதா?
மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்றும், ஆதார் எண்ணை இணைக்காத மொபைல் சேவை துண்டிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது
இந்த நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தன்னுடைய மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கப்போவதில்லை என்றும், இதனால் தன்னுடைய மொபை சேவை துண்டிக்கப்பட்டாலும் அதுகுறித்து கவலையில்லை என்றும் நேற்று அதிரடியாக தெரிவித்தார்
இந்த நிலையில் மொபைல்-ஆதார் இணைப்புக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதை அடுத்து மாற்று ஏற்பாடாக குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் உள்ளிட்ட அடையாள அட்டைகளை மொபைல் எண்ணுடன் இணைக்க பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.