1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: புதன், 25 அக்டோபர் 2017 (18:13 IST)

மொபைல்-ஆதார் எண்களை இணைக்க முடியாது: மம்தா பானர்ஜி

இந்திய குடிமகன்கள் அனைவரும் தங்களுடைய மொபைல் எண்களை ஆதார் எண்ணுடன் வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்றும் இல்லையேல் மொபைல் சேவை நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அனைவரும் தங்கள் மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர்.



 
 
இந்த நிலையில் இன்று கூட்டம் ஒன்றில் பேசிய மேற்குவங்க முதல்வர் மம்தாபானர்ஜி, தான் இன்னும் ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணைக்கவில்லை என்றும், இனிமேலும் இணைக்க முடியாது என்றும் கூறினார். மேலும் இதனால் மொபை சேவையை நிறுத்தினாலும் தான் கவலைப்படபோவதில்லை என்று தெரிவித்தார். அதுமட்டுமின்றி தன்னை போலவே அனைவரும் இதனை கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்
 
மொபைல் போனுடன் ஆதார் எண்ணை இணைத்தால் கணவன் - மனைவி தனிப்பட்ட உரையாடல்கள் உள்பட அனைத்து மொபைல்போன் உரையாடல்களும் ஒட்டுக்கேட்க வாய்ப்பு இருப்பதாகவும், எனவே யாரும் இணைக்க வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு மாநில முதல்வரே ஆதார்-மொபைல் எண்களை இணைக்க வேண்டாம் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.