சிவசேனா தலைவருடன் மம்தா பானர்ஜி திடீர் சந்திப்பு: பாஜகவுக்கு எதிராக மெகா அணியா?
பாஜகவும், சிவசேனாவும் ஒருகாலத்தில் நட்புகட்சிகளாக இருந்த நிலையில் தற்போது அதற்கு நேர்மாறாக இரு கட்சிகளும் எதிரெதிர் திசையில் உள்ளது. இதன் உச்சகட்டமாக குஜராத் தேர்தலில் பாஜகவை எதிர்த்து போட்டியிட சிவசேனா முடிவு செய்துள்ளது\
இந்த நிலையில் பாஜகவுக்கு எதிராக மெகா அணியை உருவாக்கி வரும் மேற்குவங்க முதல்வர் மம்தாபானர்ஜி இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று மும்பையில் சிவசேனா கட்சி தலைவரான உத்தவ் தாக்ரேவை சந்தித்து அரசியல் ஆலோசனை செய்துள்ளார். வரும் 2019ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பாஜகவுக்கு எதிராக மெகா அணியை உருவாக்கி மம்தா பானர்ஜி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.