1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 19 ஜூலை 2022 (18:25 IST)

கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம்: கலெக்டரை அடுத்து எஸ்பியும் இடமாற்றம்!

Kallakurichi
கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த மாணவி மர்மமான முறையில் மரணம் அடைந்ததை அடுத்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன
 
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதரன் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார் என்ற செய்தி சற்று முன் பார்த்தோம்
 
 தற்போது கலெக்டரை அடுத்து கள்ளக்குறிச்சி எஸ்பியும் இடமாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது
 
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த செல்வகுமார் என்பவர் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன இதனை அடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய எஸ்பி ஆக பகலவன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது
 
மாணவி மரணம் விவகாரத்தில் ஒரு மாவட்டத்தில் எஸ்பி மற்றும் கலெக்டர் ஆகிய இருவருமே மாற்றப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது