திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 19 ஜூலை 2022 (08:55 IST)

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: மெரினாவில் மாணவர்கள் போராட்டமா?

marina police
கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: மெரினாவில் மாணவர்கள் போராட்டமா?
கள்ளக்குறிச்சியில் 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்ததை அடுத்து பொதுமக்கள் அந்தப் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பதும் அந்த போராட்டம் திடீரென வன்முறையாக வெடித்தது என்பதையும் பார்த்தோம் 
 
இந்த நிலையில் மாணவிக்கு நீதி வேண்டும் என்று கேட்டு இன்னும் பல இடங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் சென்னை மெரினாவில் மாணவர்கள் கூட இருப்பதாகவும் அங்கு போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
 
இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரினாவில் தற்போது போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
 
கள்ளக்குறிச்சி மாணவி மரணத்திற்கு நீதி வேண்டும் எனக் கோரி சென்னை மெரினாவில் இளைஞர்கள் கடற்கரையில் கூட உள்ளதாக வந்த தகவலை அடுத்து இந்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது