திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 19 ஜூலை 2022 (08:05 IST)

கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக வதந்தி பரப்பிய 4 பேர்: சென்னையில் சிக்கியதாக கைது!

rumour
கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக வதந்தி பரப்பிய 4 பேர்: சென்னையில் சிக்கியதாக கைது!
கள்ளக்குறிச்சி வன்முறை குறித்து வதந்தி பரப்பிய 4 பேர் சிக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
கள்ளக்குறிச்சி அருகே கன்யாபுர் என்ற பகுதியில் உள்ள பள்ளியில் படித்துக்கொண்டிருந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் மரணமடைந்தார்
 
இந்த மாணவி மரணம் அடைந்து சில நாட்கள் கழித்து திடீரென மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் பொதுமக்களும் கலந்து கொள்வதால் மிகப்பெரிய அளவில் வன்முறை ஏற்பட்டது என்பதும் பள்ளியின் சொத்துக்கள் சூறையாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் மாணவி குறித்தும் அவரது மரணம் குறித்து பரப்பப்பட்ட வதந்தி தான் இந்த வன்முறைக்கு காரணம் என்று கூறப்பட்ட நிலையில் இந்த வதந்தியை பரப்பிய நான்கு பேர் சென்னையில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
ஒரு பள்ளி மாணவர் மற்றும் 3 கல்லூரி மாணவர்கள் தான் இந்த வதந்தியை பரப்பி உள்ளதாக கூறப்படும் நிலையில் அவர்கள் நால்வரையும் தற்போது காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது.