திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 19 மார்ச் 2021 (18:53 IST)

கமல் தொகுதியில் கலா மாஸ்டர்: பாஜகவுக்காக வேற லெவல் பிரச்சாரம்

கமல் தொகுதியில் கலா மாஸ்டர்: பாஜகவுக்காக வேற லெவல் பிரச்சாரம்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார் என்பதும் அந்த தொகுதியில் அவரை எதிர்த்து வானதி சீனிவாசன் போடுகிறார் என்பதும் தெரிந்ததே
 
இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பதை இன்னும் பலருக்கு தெரியவில்லை என்பதால் அவர் போட்டியில் இருந்து கிட்டத்தட்ட விலகி விட்டதாகவே தெரிகிறது. இதனை அடுத்து கமல் மற்றும் வானதி இடையேதான் நேருக்கு நேர் போட்டி ஏற்பட்டுள்ளது
 
இந்த நிலையில் கமலுக்கு ஆதரவாக திரையுலக பிரபலங்கள் பிரச்சாரம் செய்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் ஒருவர் கூட இன்னும் அவருக்கு ஆதரவாக குரல் கூட கொடுக்கவில்லை என்பது வருத்தமான விஷயம்
 
ஆனால் அதே நேரத்தில் பாஜகவுக்கு ஆதரவாக திரையுலக பிரமுகர்கள் வரிந்துகட்டிக்கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்ர். குறிப்பாக டான்ஸ் மாஸ்டர் கலா அவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே பாஜகவில் இணைந்து விட்டாலும் தற்போதுதான் முதன் முதலாக பிரச்சார களத்தில் இறங்கியுள்ளார். அவர் வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன் உடன் இணைந்து நடந்தே சென்று பல இடங்களில் வேற லெவல் பிரசாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது