1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. kamal release MNM election manifesto

மக்கள் நீதி மய்யம் தேர்தல் அறிக்கை: கோவையில் இன்று கமல்ஹாசன் வெளியீடு!

மக்கள் நீதி மய்யம்
தமிழகத்தில் ஏப்ரல் 2ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக திமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை வெறுப்பாக கவனித்து வருகின்றன
 
இந்த நிலையில் அதிமுக திமுக உள்ளிட்ட ஒருசில கட்சிகள் தேர்தல் அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மூன்றாவது அணியாக போட்டியிடும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியாக உள்ளது
 
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் இன்று தேர்தல் அறிக்கையை கோவையில் வெளியிடவுள்ளார். சரத்குமார் கட்சி மற்றும் பாரிவேந்தர் கட்சி உள்ளிட்ட ஒரு சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ள மக்கள் நீதி மய்யம் வெளியிடப்போகும் இன்றைய தேர்தல் அறிக்கையில் வித்தியாசமான அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இன்று மதியம் 12 மணிக்கு கோவையில் கமல்ஹாசன் தேர்தல் அறிக்கையை வெளியிடவுள்ளதாக மக்கள் நீதி மையம் கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்
 
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
கமல்ஹாசன்: நடிகர் முதல் அரசியல்வாதி வரை ஒரு "தசாவதாரம்"