1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 18 மார்ச் 2021 (22:27 IST)

திமுகவை அதிகம் விமர்சிக்கும் கமல்-சீமான்: உண்மையிலேயே ‘பி’ டீம் தானா?

அதிமுக திமுக ஆகிய இரண்டு கூட்டணிகளுக்கு இடையில் தான் உண்மையான தேர்தல் நடைபெற்று வருவதாகவும் மற்ற கூட்டணிகள் ஓட்டை பிரிக்கும் கூட்டணிகளாக இருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
குறிப்பாக ஆளுங்கட்சிக்கு எதிரான ஓட்டுக்களை பிரிப்பதில் கமல்ஹாசன் மற்றும் சீமான் அணியினர் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்கள் ஆளுங்கட்சியை பெரும்பாலும் குற்றம் காட்டாமல் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறார்கள் என்பதே இதற்கு சான்றாக உள்ளது 
 
சமீபத்தில் கூட திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு கண்டனம் தெரிவித்த கமல்ஹாசன் ஆவேசமாக பேசியதும் டுவிட்டரில் பதிவு செய்ததும் தெரிந்தது. இதனை வைத்து உண்மையிலேயே கமல் மற்றும் சீமான் ஆகிய இருவரும் பாஜகவின் பி டீம்தானா என்று நெட்டிசன்கள் சந்தேகத்தில் உள்ளனர்