திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 18 மார்ச் 2021 (22:55 IST)

கமல்ஹாசன் கட்சி வேட்பாளருக்கு கொரோனா உறுதி...

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் வரவுள்ளது. இதற்கான அமைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் முழுக்க ஒரே கட்டமாக நடைபெறவுள்ள இத்தேர்தலில் ஓட்டு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளரும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான சந்தோஷ்பாபுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சியினரும் ஆதரவாளர்களுக்கும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் அவர் நோய்த்தொற்று காரணமாக டிஜிட்டல் முறையில் பிரசாரம் செய்ய உள்ளதாகக் கூறியுள்ளார்.