வெள்ளி, 17 ஏப்ரல் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 29 ஜனவரி 2026 (17:33 IST)

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க நாளை கடைசி நாள்.. ஆனால் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க நாளை கடைசி நாள்.. ஆனால் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் SIR தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஒரு முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் வழங்கப்பட்டிருந்த கால அவகாசத்தை மேலும் 10 நாட்கள் நீட்டிக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
 
தமிழ்நாட்டில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட இந்த SIR நடவடிக்கையின் போது, சுமார் 97 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் வரைவு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதில் இறந்தவர்கள் மற்றும் குடிபெயர்ந்தவர்கள் தவிர, தகுதியுள்ள பல வாக்காளர்களின் பெயர்களும் விடுபட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன. குறிப்பாக, பெயர் நீக்கம் செய்யப்பட உள்ள பலருக்கு உரிய முன்னறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்படவில்லை என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
 
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஜனவரி 30-ஆம் தேதிக்கு பிறகு, கூடுதலாக 10 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.  வாக்காளர்கள் தங்கள் பகுதி வாக்குச்சாவடி மையங்கள், தாலுகா அலுவலகங்கள் அல்லது ஆன்லைன்  மூலம் விண்ணப்பிக்கலாம்.
 
பெயர் நீக்கம் செய்யப்படுபவர்களின் பட்டியலை கிராம பஞ்சாயத்து அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் காட்சிப்படுத்தவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
 
வாக்காளர் பட்டியலில் இருந்து தகுதியான ஒரு நபர் கூட விடுபடக்கூடாது என்பதை உறுதி செய்வதே இந்த உத்தரவின் நோக்கம். இந்த கூடுதல் கால அவகாசத்தை பயன்படுத்தி, பெயர் விடுபட்டவர்கள் உடனடியாக படிவம் 6-ஐ சமர்ப்பித்து தங்கள் ஜனநாயக கடமையை உறுதி செய்ய வேண்டும்.
 
Edited by Siva