வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (18:15 IST)

அதிமுக பொதுக்குழு வழக்கு: விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி

ops
அதிமுக பொதுக்குழு வழக்கை விசாரணை செய்துவரும் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி மாற்ற வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு கடும் கண்டனங்கள் எழவே ஓ பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து மன்னிப்புக் கேட்கபட்டதாகவும் கூறப்பட்டது
 
இந்த நிலையில் தன்னை விமர்சித்து கடுமையான வார்த்தைகளில் பதிவு செய்து வேறு நீதிபதி மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை அடுத்து அதிமுகவுக்கு எதிரான வழக்கு விசாரணையிலிருந்து உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விலகியதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
நடந்தது நடந்ததாக இருக்கட்டும் திறந்த மனதோடு வழக்கை விசாரணை செய்யுங்கள் என ஓபிஎஸ் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. இருப்பினும் அதிமுக பொதுக்குழு வழக்கில் இருந்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதிமுக பொதுகுழு வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்ற மனுவை  ஓபிஎஸ் திரும்ப பெற்ற போதிலும் நீதிபதி இந்த வழக்கில் இருந்து விலகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது