1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 10 ஆகஸ்ட் 2022 (11:41 IST)

வருங்காலத்தில் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைய வாய்ப்புள்ளது" -டிடிவி தினகரன்

dinakaran
வரும் காலத்தில் ஒரு பன்னீர்செல்வம் அவர்களுடன் இணைந்து அரசியல் செய்ய வாய்ப்பு உள்ளது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
அதிமுகவில் தற்போது ஓபிஎஸ் இபிஎஸ் என இரண்டு பிரிவுகள் ஆகிவிட்டது என்பதும் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக பதவி ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில்  அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிமுக குறித்து கருத்து கூறியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்றும் அதிகாரத்திற்காக யாரை வேண்டுமானாலும் அழிக்க நினைப்பவர் என்றும் தெரிவித்தார்
 
மேலும் வரும் காலத்தில் ஓ பன்னீர் செல்வத்துடன் இணைந்து அரசியல் செய்ய வாய்ப்பு உள்ளது என்றும் ஆனால் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒருபோதும் கைகோர்க்க மாட்டேன் என்றும் அவர் தெரிவித்தார்